MASALA TEA/மசாலா டீ 50GM

75.00

இந்தியர்களின் தினசரி பழக்கங்களில் முக்கியமான ஒன்று டீ குடிப்பது. டீ குடிப்பது என்பது நமது வாழ்க்கை முறையுடன் பிணைந்த ஒன்றாகும். பலரும் காலையில் எழுந்தவுடன் முதலில் நாடுவது தேநீரைதான். ஏனெனில் டீ நமக்கு தேவையான புத்துணர்ச்சியையும், ஆற்றலையும் வழங்குகிறது. நமக்கு புத்துணர்ச்சியை வழங்கும் தேநீரில் பல வகைகள் உள்ளது

பண்டைய காலத்தில் வெறும் பாலை கொண்டே தீ தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது ஆரோக்கியத்திற்காக க்ரீன் டீ, லெமன் டீ என பல புதிய தேநீர்கள் வந்துவிட்டன. இந்த ஒவ்வொரு தேநீரும் ஒரு ஆரோக்கிய நன்மையை வழங்கக்கூடியது. அதில் முக்கியமான ஒரு தேநீர்தான் மசாலா டீ. இந்த மசாலா டீயை எப்படி தயாரிப்பது என்பதையும் அதன் பல்வேறு பயன்களையும் இங்கு பார்க்கலாம்.

இந்த மசாலா டீ சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. இந்த மசாலா டீ தயாரிக்க உங்களுக்கு தேவையானது இஞ்சி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, மிளகு மற்றும் கிராம்பு. மசாலா டீ தயாரிக்க இந்த பொருட்களை எடுத்து அவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். பின்னர் பாலை கொதிக்கவைக்கும்போது அதில் இந்த தூளை போட்டு கொதிக்க வைக்கவும். பின்னர் டீத்தூள் சேர்த்து கொதிக்கவைக்கப்பட்டு வடிகட்டி சர்க்கரை சேர்த்து குடிக்கவும். சிறிது கார சுவையுடன் கூடிய இந்த மசாலா டீ உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடும்.

SKU: SKU-HT-009 Category: Tag:

Masala Tea

Weight 0.050 kg