TULSI TEA/துளசி டீ 50GM

60.00

துளசி இலை இந்திய துணைக்கண்டத்தில் ஒரு புனிதமான இலையாக பார்க்கப்படுகிறது. துளசியில் பல்வேறு ஆரோக்கிய பலன்கள் உள்ளன. அந்த காலத்தில் வீடுகளில் துளசி மாடம் என்று ஒன்று வைக்கபட்டு, அதில் ஒரு துளசி செடியை வைத்து வழிபடுவது வழக்கம். காலையில் எழுந்தவுடன், பெண்கள் அந்த மாடத்தின் முன் கோலமிட்டு, விளக்கேற்றி அந்த துளசி மாடத்தை சுற்றி வருவர்.

ஆண்கள், அந்த துளசி செடியில் உள்ள இலைகளை எடுத்து மென்று சாப்பிட்டு வந்தனர். இது அவர்கள் உடலை ஆரோகியடுடன் வைக்க உதவியது. ஆனால் இந்த அகாலத்தில் துளசி மாடத்தை நாம் பார்க்க முடிவதில்லை. கோயில்களிலும், சந்தைகளிலும் மட்டுமே இன்று துளசியை பார்க்க முடிகிறது.

துளசி இலையை எடுத்து கொள்வதற்கு சிறந்த வழி, சில இலைகளை எடுத்து, நன்றாக கழுவி அப்படியே அதனை மென்று தின்பது தான். மற்றொரு வழி, ஒரு கட்டு துளசி இலையை எடுத்து ஒரு இரவு முழுதும் 2 லிட்டர் நேரில் ஊற வைக்கவும். பின்பு, அந்த நீரை, காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது துளசி இலையின் சிறந்த பணியாகும். துளசி இலையை தினசரி சாப்பிட்டு வருவதால், நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகி, கிருமிகளை அழிக்கிறது. மேலும், சளி, இருமல் மற்றும் இதர தொற்றுக்கள் வராமல் பாதுகாக்கிறது. துளசியில் உள்ள அன்டி ஆக்ஸ்சிடென்ட் தன்மை உடலில் தீங்கு விளைவிக்கும் கூறுகளை விரட்டி, செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. இதன்மூலம் பல்வேறு நோய்கள் உடலுக்கு வராமல் தடுக்கப் படுகிறது. இங்கே துளசி இலைகளால் உண்டாகும் பல்வேறு நன்மைகளை பற்றி விளக்கப் பட்டிருக்கிறது. மேலும் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

SKU: SKU-HT-012 Category: Tags: ,

Herbal Tea

Weight 0.050 kg